கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணம் சட்காய் பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்றினால் அங்குள்ள பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு உணவை உட்கொண்ட சுமார் 500 பேர் வரையில் மயங்கி விழுந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த உணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் சிறுவர்கள் உள்பட பலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதன்படி சுமார் 200 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.