ஆப்கானிஸ்தானில் இன்று (12) காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று (12) காலை 4.51 மணியளவில் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
பூமிக்கடியில் சுமார் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபா் 7ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4,000க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததுடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.