NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றிக்கண்டது தென் ஆபிரிக்க அணி!

T20 உலகக்  கிண்ண அரையிறுதி போட்டியில் 56 ரன்களில் ஆப்கானிஸ்தானை சுருட்டி தென்ஆபிரிக்கா வெற்றி இலக்கைத் தொட்டது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆபிரிக்கா இடையேயான முதல் T20 உலகக் கிண்ண அரையிறுதி போட்டி நேற்று தரவுபா நகரில் நடந்தது. இதில், நாணயச் சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

அந்த அணி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குர்பாஸ் (0), இப்ராகிம் ஜத்ரான் (2) ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து விளையாடிய நயீப் (9), முகமது நபி (0) மற்றும் கரோட் (2) ரன்களில் வெளியேறினர்.

இதனால், 5 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவும் வகையில் விளையாடி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தென்ஆபிரிக்க அணி விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெறும் முனைப்பில் அதிரடியாக விளையாடி வருகிறது.

தொடர்ந்து, உமர்ஜாய் (10), கரீம் (8), அகமது (0), அணியின் கேப்டன் ரஷீத் கான் (8), நவீன்-உல்-ஹக் (2) ரன்களில் ஆட்டமிழந்தனர். பரூகி (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்த சூழலில், 11.5 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மிக குறைவாக 56 ரன்கள் எடுத்தது.

தென்ஆப்பிரிக்க அணியின் ஷாம்சி மற்றும் ஜேன்சன் தலா 3 விக்கெட்டுகளும், ரபடா மற்றும் நார்ஜே தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து, 57 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. T20 போட்டியில் இறுதிப் போட்டிக்கு முதற்தடவையாக இதன் மூலம் தெரிவாகியுள்ளது தென்னாபிரிக்கா.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles