மேல் மாகாணத்தில் முதற் தடவையாக பதிவான ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் நிலைமையானது மேலும் சில மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் பரிசோதனைக்களுக்கமைய, ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நோய் நிலைமை வடக்கு, ஊவா மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் முதற்தடவையாக குறித்த நோய் நிலைமை பதிவானது இதனையடுத்து, பன்றிகள் மற்றும் அதன் இறைச்சிகளைக் கொண்டு செல்ல வேண்டுமாயின் அதற்கு பிரதேச சுகாதார அதிகாரிகளின் அனுமதியைக் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் கட்டாயப்படுத்தியிருந்தது.
அத்துடன் பன்றி வளர்ப்புப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால், அந்த இடங்களுக்கு சீல் வைத்து முத்திரையிட நீதிமன்ற உத்தரவைப் பெறுமாறும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.