NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆயுததாரிகளின் தாக்குதலில் பலர் பலி.

ரஷ்யாவின் காக்கசஸ் மாகாணம் மக்கஞ்கலா, டர்பெண்ட் ஆகிய நகரங்களில் உள்ள மதவழிபாட்டு தலங்கள் மீது ஆயுததாரிகள் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் பாதிரியார் மற்றும் காவல்துறையினர் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்தவ மற்றும் யூத மதவழிபாட்டு தலங்களை குறிவைத்து ஆயுததாரிகள் தாக்குதலை முன்னெடுத்தனர். மதவழிபாட்டு தலங்களுக்குள் புகுந்த அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், மதபோதகரை கொலை செய்தனர். பின்னர், மதவழிபாட்டு தலங்களை தீவைத்து கொளுத்தினர்.

அதேபோல், டர்பெண்ட் நகரில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடியை குறிவைத்தும் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல்களில்15 காவல்துறையினர் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட ஆயுததாரிகள் மீது நடத்தப்பட்ட பதில் தாக்குதல்களில் ஆறுபேர் கொல்லப்பட்டதாக தாகெஸ்தான் குடியரசின்தலைவரான செர்ஜி மெலிகோவ்,தெரிவித்தார்.

Share:

Related Articles