பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் பேஸ்புக் கணக்கின் ஊடாக, 3 சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 7 இலட்சம் ரூபாவை வைப்பிலிடச் செய்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.