ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னணியில் நிற்பதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்கள் தொகையில் 10% முதல் 15% சதவீதமானோர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோரை உடல் மற்றும் மன ரீதியான அசௌகரியத்துக்கு உள்ளாக்குவதாகவும் கூறியுள்ளார்.
ஆஸ்துமா நோயை சரியான முறையில் கட்டுப்படுத்தாவிட்டால் அது மக்களின் மரணத்துக்கு வழிவகுக்கும். 95% ஆஸ்துமா நோயாளிகளை எளிமையான, மிகவும் செலவு குறைந்த, உயர் செயல்திறன் கொண்ட மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 பேர் ஆஸ்துமாவால் இறக்கின்றனர் என்றார்.
இந்த ஆண்டு மே 07ஆம் திகதி உலக ஆஸ்துமா தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தினால் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக மருத்துவர் கூறினார்.