NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் காலமானார்!



இங்கிலாந்து உலகக் கிண்ண வெற்றியாளரும், மான்செஸ்டர் யுனைடெட்டின் முன்னாள் நட்சத்திர வீரருமான சர் பாபி சார்ல்டன், தனது 86 வயதில் காலமானார்.


1966 உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் சார்ல்டன் ஒரு முக்கிய பங்களாராக இருந்தார்.


மேலும் யுனைடெட் அணியுடன் கழக அளவில் சிறந்த வெற்றியையும் பெற்றார்.


1968 ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தை வென்ற முதல் ஆங்கில கழகம் என்ற பெருமையைப் பெற அவர் காரணமாக இருந்துள்ளார்.


‘சனிக்கிழமை அதிகாலையில் சர் பாபி நிம்மதியாக காலமானார் என்ற தகவலை அவரது குடும்பத்தினர்’ அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளனர்.


‘அவரது கவனிப்புக்கு பங்களித்த அனைவருக்கும்இ அவரை நேசித்து ஆதரவளித்த பலருக்கும் நன்றிகளை தெரிவிக்க விரும்புவதாகவும்’ குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


2020 ஆம் ஆண்டில், சார்ல்டனுக்கு டிமென்ஷியா இருப்பது கண்டறியப்பட்டது. நோய் தாக்கியதால் அவர் ஓல்ட் டிராஃபோர்டில் போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்தினார்.


மான்செஸ்டர் யுனைடெட் சார்ல்டனுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு தங்கள் அனுதாபங்களையும் வெளியட்டுள்ளது.


1966 ஆம் ஆண்டு உலகக் கிண்ண வெற்றியில் சார்ல்டன் முக்கிய பங்கு வகித்ததற்காக இங்கிலாந்தின் தேசிய சின்னம் போல் கொண்டாடப்பட்டார்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles