இணையத்தள நிதி மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுதெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.
“செப்டம்பர் மாதம் வரை, இணைத்தளங்கள் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் தொடர்பானவையாகும்.
அதில் சுமார் 20% முறைப்பாடுகள் இணையத்தள மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வந்தவை.
இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.
பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் பேங்கிங் பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும்.
ஒன்லைன் வங்கி மோசடிகள் தொடர்பாக கடந்த காலங்களில் 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
பலர் தமது வங்கி தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாததால் அடிக்கடி இந்த மோசடிகளில் சிக்கியுள்ளனர்” என்றார்.