NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இணைய விசா விவகாரம் – உயர்நீதிமன்றமத்தின் உத்தரவு!

இணைய விசா இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையைத் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை அமுலாக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தற்போதுள்ள இணைய விசா முறையை மாற்றி இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

குறித்த அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்தவே உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் மூன்று நிறங்களில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படவுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனை தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

அதன்படி சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கு என மூன்று வௌ;வேறு நிறங்களில் இந்த கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles