NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இத்தாலியில் சேற்று சுனாமி : பீதியில் மக்கள் !

நகரின் நடுவே நதி ஓடுவதால் நதிக்கரையில் இருந்து பொங்கி எழுந்த சேறுடன் கூடிய தண்ணீர் நகரம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் நகரம் முழுவதும் சேற்றால் பூசப்பட்டது போன்று காட்சியளித்துள்ளது.

கனமழை காரணமாக மலைப்பகுதியில் உள்ள ஓடை நிரம்பிஇ நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை என்றும்இ 120 பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வீதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மற்றும் வாகனங்களில் சேறு ஒட்டிக்கொண்டதால் சுத்தப்படுத்தும் பணிகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles