(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தெற்காசிய யுனிசெப் சிறுவர் பிராந்தியத்திற்கான நல்லெண்ண தூதராக பணியாற்றி வரும் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், யுனிசெப்பின் நிகழ்ச்சி திட்டங்களில் ஒன்றாக இலங்கை வந்துள்ளார்.
அதற்கமைய, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், விளையாட்டுத் துறையில் முன்னோடியாகத் திகழும் கிராமியப் பாடசாலையான ருவன்வெல்ல பல்லேகெனுகல கனிஷ்ட கல்லூரியின் கண்காணிப்பு சுற்றுலாவில் அவர் நேற்று (07) கலந்துகொண்டார்.
அங்கு பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு பொருட்களை நன்கொடையாக வழங்கியதுடன், மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாட்டிலும் ஈடுபட்டிருந்தார்.