NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்தியாவின் 75ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் (படங்கள்)

இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தை நினைவுகூரும் வகையில், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று (26) வெகுவிமர்சையாக கொண்டாடியது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திர குழு உறுப்பினர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் தலைமையில் விழா இடம்பெற்றது.

‘ஸ்ரீங்கர் – பாரம்பரிய இந்திய நடன வடிவங்களின் நாட்டியம்’ என்ற நடனக் குழுவின் ஏற்பாட்டுடன் பாரம்பரிய நடனக்கலைகள் இடம்பெற்றிருந்தன.

இதேவேளை, கொழும்பு இந்து மகளிர் கல்லூரியின் இளம் மாணவிகளால் நடன நிகழ்ச்சி மேலும் அலங்கரிக்கப்பட்டது. இந்த கூட்டு இந்தியா-இலங்கை நிகழ்ச்சி இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளின் செழுமையை உள்ளடக்கும் வகையில் இருந்தது.

Share:

Related Articles