NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய முட்டைகள் இன்று முதல் சதொச ஊடாக நுகர்வோருக்கு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யப்படும் பொதி செய்யப்பட்ட முட்டை ஒன்றின் விலை ரூபா 40 எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles