NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்திய வீரர் சிராஜ் வழங்கிய நன்கொடை இதுவரை கிடைக்கவில்லை – மைதான பராமரிப்பு பொறுப்பாளர்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பணியாற்றிய மைதான பராமரிப்பாளர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜினால் அறிவிக்கப்பட்ட 5000 அமெரிக்க டொலர் இதுவரை கிடைக்கவில்லை என மைதான பராமரிப்பு பொறுப்பாளர் கொட்பிரி தபரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு 5000 அமெரிக்க டொலர் வழங்குவது குறித்து, மொஹமட் சிராஜ் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

இவ்வாறான அறிவிப்புக்களினால், தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டினார். மொஹமட் சிராஜ் வெளியிட்ட அறிவிப்பின் பிரகாரம், அந்த தொகை கிடைக்கும் என தன்னால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிய கிரிக்கெட் பேரவையினால் அறிவிக்கப்பட்ட 50000 அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகவும் இதன்படி, பல்லேகல மைதானத்தில் 120 – 125 பராமரிப்பாளர்கள் உள்ளதாகவும், கொழும்பில் 140 மைதான பராமரிப்பாளர் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இரண்டு மைதானங்களிலும் சேர்த்து மொத்தமான 265 மைதான பராமரிப்பாளர் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், நிரந்தர ஊழியர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக தொகை கிடைக்கும் என்பதுடன், நாள் கூலி அடிப்படையில் பணியாற்றிய ஒருவருக்கு சுமார் 80,000 ரூபா கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles