NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இந்த வருட இறுதிக்குள் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

இந்த ஆண்டு இறுதிக்குள் வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் என திறைசேரியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்வது தொடர்பில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் முதல் சுற்றுலா மற்றும் பிற பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும் என தெரிவித்தார்.

அத்துடன், அடுத்த மாதமளவில் இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் லொறிகள், டிப்பர் மற்றும் பெக்ஹோ போன்ற தொழில்துறை வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க மற்றொரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும் திறைசேரியின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கார்கள், வான்கள் மற்றும் ஜீப்கள் போன்ற தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அமைச்சரவை பத்திரம், அடுத்த வருடத்தின் ஆரம்பித்தில் சமர்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles