கொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர்.
பம்பலப்பிட்டி – டூப்ளிகேஷன் வீதியில் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி குறித்த பஸ் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த போது தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பெண்கள் இருவர் மற்றும் ஆண்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.