புத்த ரஷ்மி தேசிய வெசாக் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
மே 05,06 மற்றும் 07 ஆம் திகதிகளில் கங்காராம விகாரை , ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகங்களில் இந்த பண்டிகை கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இவ்வருட வெசாக் பண்டிகையை புத்தளம் – சிலாபத்தை மையமாகக்கொண்டு தேசிய மட்டத்திலும், பிரதேச மட்டத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாட முன்னராகவே திட்டமிட்டிருந்தது.
புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில் நாற்பது பிக்கு மாணவர்கள் மற்றும் 1200 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்படும்.
சிங்கப்பூரின் மகா கருணா பௌத்த சங்கமும் சிங்கப்பூரின் விலிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்யும் வெசாக் அன்னதான நிகழ்வு, இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஷங்கிரிலா பசுமை மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அது மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளிலும் தொடர்ந்து நடைபெறும்.
இதற்கு இணையாக மின்விளக்கு அலங்காரத் தோரணங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், இலங்கை கடற்படை, சிவில் பாதுகாப்புப் படை, இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இராணுவ பக்திப் பாடல் குழுக்களினால் நிகழ்த்தப்படும் பக்திப் பாடல் நிகழ்ச்சி ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில் மே 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறும்.