NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பும்…!

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பும் என புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அலுவலக தொடருந்து சேவைகள் இன்று மாலை வழமைபோல முன்னெடுக்கப்படுமென அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மாளிகாவத்தை புகையிரத சாலையின் பிரதி கட்டுப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை முதல் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் நேற்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, குறித்த பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக புகையிரத கட்டுப்பாட்டாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles