NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று 20 புகையிரத பயணங்கள் இரத்து…!

புகையிரத  லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல புகையிரத நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர்  எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்தார்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (12) காலை பல புகையிரத பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 சிலாபம், கணேவத்தை, அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பல புகையிரத இன்று காலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து துணை பொது மேலாளர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்தார்.

மேலும், கொழும்பில் இருந்து இயக்கப்படவிருந்த பல குறுகிய புகையிரத பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது, ரம்புக்கன, பொல்கஹவெல, கண்டி, மஹவ, குருநாகல், காலி, அவிசாவளை ஆகிய பகுதிகளில் இருந்து ரயில்கள் வருவதாக புகையிரத போக்குவரத்துப் பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜே.  இதிபோலகே தெரிவித்தார்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த சுமார் 20 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்து

Share:

Related Articles