NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்று LSG vs CSK போட்டி!

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. 

அந்த வகையில் லக்னோவில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 45வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது. 

சென்னை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்றிருக்கிறது. எஞ்சிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி தேவை என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் சென்னைக்கு முக்கியத்துவம் பெறுகிறது.

 சென்னை அணி ஏற்கனவே 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இருப்பதால், அதிக நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். 

 லக்னோ அணியும் 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணியின் தலைவர் லோகேஷ் ராகுல் தொடையில் தசைப்பிடிப்பு காயத்தில் சிக்கியிருப்பது நிச்சயம் பின்னடைவாகும். அவருக்கு பதிலாக குருணல் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார்.

 போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:- சென்னை: கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, டோனி (தலைவர்), அம்பத்தி ராயுடு, தீக்ஷன அல்லது மிட்செல் சான்ட்னெர், துஷர் தேஷ்பாண்டே, பதிரானா, ஆகாஷ் சிங். 

லக்னோ: கைல் மேயர்ஸ், மனன் வோரா அல்லது பிரேராக் மன்கட், ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா (தலைவர்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கௌதம், அமித் மிஸ்ரா, அவேஷ்கான் அல்லது யாஷ் தாக்குர், ரவி பிஷ்னோய், நவீன் உல்-ஹக் அல்லது மார்க்வுட்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles