ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி அதில் 2 வெற்றியும் (பஞ்சாப், கொல்கத்தாவுக்கு எதிராக), 2 தோல்வியும் (லக்னோ, ராஜஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது.
அணித்தலைவர் மார்க்ரம், அபிஷேக் ஷர்மாவும் அந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடிய நிலையில், பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், புவனேஷ்வர்குமார், சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே ஆகியோரும் அணிக்கு பலம் சேர்த்திருந்தனர்.
தொடக்க இரு ஆட்டங்களில் பெங்களுரு அணி, சென்னை அணியிடம் தோல்வியுற்று, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அதன் பிறகு டெல்லி, கொல்கத்தா அணிகளை தோற்கடித்தது. இப்போது ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைத்து களம் காணுகிறது. முதல் 3 ஆட்டங்களில் தடுமாறிய சூர்யகுமார் யாதவ் கொல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்து ஒரு வழியாக வழமைக்குத் திரும்பியமை சுட்டிக்காட்டத்தக்கது.