மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி ,மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.