நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (15) இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் எனவும்மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.