NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இன்றைய வானிலை…!

நாட்டில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும், மேல் சபரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிலபிரதேசங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles