(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இரத்மலானையில் விபசார விடுதியொன்றை சுற்றிவளைத்த போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலையக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு, விபசார விடுதியின் முகாமையாளராகப் பணியாற்றிய வெலிமடையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும், விபசார விடுதியை நடத்துவதற்கு உதவிய களுத்துறை மற்றும் பொல்பித்திகம பிரதேசத்தைச் சேர்ந்த 19 முதல் 26 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் பெண் சந்தேகநபர்கள் கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (03) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.