NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரவு தபால் புகையிரதம் இரத்து..!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று இரவு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை இயக்கப்படவிருந்த இரவு தபால் புகையிரதம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை தபால் புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட இருந்தது.

இந்தநிலையில், தற்போது நாட்டில் நிலவும் கடும் மழை உடனான காலநிலை காரணமாக மலையகப் பாதையில் இயங்கும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles