NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்காகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தை உரிய தரப்பினரிடம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவை கையூட்டலாகப் பெற முனைந்த போதே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கையூட்டல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் மட்டக்களப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக அந்த ஆணைக்குழு விடுத்திருந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

கைதான இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இருவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

Share:

Related Articles