NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இராணுவத்தை மறுசீரமைப்பதற்கான உத்தரவுகளில் ட்ரம்ப் கையொப்பம்!

அமெரிக்க இராணுவத்தை மறுசீரமைப்பதற்கான நிறைவேற்று உத்தரவுகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.

நாஜி ஆட்சியிலிருந்து அவுஷ்விட்ஸ் கைதிகள் முகாம் விடுவிக்கப்பட்டு 80ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் போலந்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட போது டொனால்ட் ட்ரம்ப் இவற்றில் கையொப்பமிட்டுள்ளார்.

இதனிடையே, கொரோனோ தடுப்பூசியைப் பெற மறுத்தமைக்காக இராணுவத்திலிருந்து அகற்றப்பட்ட எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பணியில் இணைத்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தின் ஆயுதப் படைகளின் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தைப் பாதுகாக்க டொனால்ட் ட்ரம்ப் பல இராணுவ சட்டங்களையும் சீரமைத்துள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Share:

Related Articles