NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரா. சம்பந்தனுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இரா.சம்பந்தன் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவேன்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்ற வாழ்க்கையை அவர் இடைவிடாமல் பின்பற்றினார். அவரது பிரிவால் துயரும் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் ” – என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

Share:

Related Articles