இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக மலர்மதி கங்காதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
