மஹாஓயா – அரலகங்வில பகுதியில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹா ஓயாவில் இருந்து அரலகங்வில திசை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் எதிர்திசையில் வந்த மற்றுமொரு தனியார் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பஸ்களில் பயணித்த 2 ஆண்கள், 12 பெண்கள், 6 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் காயமடைந்து மஹாஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பஸ் ஒன்றின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக மஹாஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.