(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கைக்கு பாம் ஒயில் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஆசிய பாம் ஒயில் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையில் பாம் ஒயில் உற்பத்திகளை ஊக்குவிப்பதன் மூலம் பாரிய நன்மைகளை அடைய முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாம் ஒயில் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் குறித்த சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.