NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலக்கை அடைந்த ஆதித்யா விண்கலம்…!

சூரியனை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்.1 புள்ளியை அடைந்துள்ளது. 

சூரியனை ஆராய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவினால் ஏவப்பட்ட ஆதித்தியா எல் 01 என்ற விண்கலம் தமது இலக்கை அடைந்துள்ளது.

ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து  கடந்த (2023.09.02) ஆம் திகதி குறித்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோவின் ஆதித்யா எல் – 1 என்ற விண்கலம், நீள்வட்டப்பாதையில் பூமியைச் சுற்றி படிப்படியாக தமது சுற்றுப்பாதையை அதிகரித்து சூரியனை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொண்டு, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள முதல் லக்ராஞ்சியன் புள்ளியைச் சுற்றி நிலவும் பூச்சிய ஈர்ப்பு விசையுள்ள சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.

ஆதித்தியா எல் – 1 என்ற விண்கலம், தொடர்ச்சியாக 5 வருடங்கள் குறித்த லாக்ராஞ்சியன் புள்ளியில் இருந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் என குறிப்பிடப்படுகிறது.

இஸ்ரோவின் குறித்த வெற்றியின் மூலம் சூரியன் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்  4 ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles