NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கான  உயர்ஸ்தானிகராலயம் நியுஸிலாந்தில் திறக்கத் தீர்மானம்

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பிரதீபா சேரம் தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

இலங்கையின் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களின் பெரும் குழு தற்போது அங்கு தங்கியுள்ளதுடன், அவர்களுக்கு வசதிகளை வழங்குவதும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் முதன்மை நோக்கங்களாகுமென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles