ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கான திறமையான தலைவர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சப்ரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது இதுவே முதல் தடவை எனவும், தான் முன்னர் எதிர் அணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் கைகோர்ப்பாரா என வினவியபோது, ஒரு அரசியல் கட்சியை விட்டுக்கொடுக்கும் வகை தாம் இல்லை என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கையின் தலைவராகத் தகுதியுடைய வேறு எவரையும் காண முடியாது என அமைச்சர் சப்ரி தெரிவித்துள்ளார்.
தாம் முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான எதிர் அணியில் செயற்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர், தற்போது ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட்டதன் மூலம் அவர் மீது தவறான அபிப்பிராயம் இருந்தமை தெளிவாகின்றது எனவும் தெரிவித்தார்.