NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் படகு சேவை..!

இந்தியாவின் காரைக்கால் துறைமுகம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகு சேவை ஏப்ரல் 29 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஒரு வழி பயணத்திற்கு ஒரு பயணிக்கு US$50 வசூலிக்கப்படும். மற்றும் 100 கிலோ நிறையுடைய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

ஒரு படகு ஒரு நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு சுமார் 4 மணி நேரம் பயணம் செய்யும் மற்றும் முதல் கட்ட நடவடிக்கைகளின் போது பகல் நேர செயல்பாடுகள் மட்டுமே நடத்தப்படும்.

படகுச் சேவை திறக்கப்பட்டுள்ளதால், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு தொழில்முனைவோரும் இந்த வாய்ப்பில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த கட்டுமானங்களுக்கு தற்போது இந்தியாவினால் வழங்கப்படும் கடன் மானிய வசதி போதுமானதாக இல்லாததால், இந்தியன் எக்சிம் வங்கியிடம் கூடுதலாக 16 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வசதி கோரப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

Share:

Related Articles