NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையின் ஆட்சியியல் பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு!

இலங்கையின் ஆட்சியியல் பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கை வெளியீடு
இலங்கையின் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தோற்றப்பாடு பற்றிய சிவில் சமூக ஆளுகை கண்டறிதல் அறிக்கையானது நாட்டில் தற்சமயம் காணப்படுகின்ற நெருக்கடிகள் தொடர்பான அடிப்படை காரணிகளை கண்டறிவதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் பூரணத்துமிக்க ஆளுகை தொடர்பான விதப்புரைகளை அறிமுகம் செய்கின்றது.

இவ்வறிக்கையானது ஆழமான ஆய்வின் பெறுபேறாக காணப்படுவதுடன், அரசாங்கத்தின் முக்கிய அம்சங்களை முன்னுரிமைப்படுத்துவதுடன், பொதுமக்கள் கருத்துகள் மற்றும் பொருளாதார ஆளுகை கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் முறையான அவதானிப்புகள் அவசியப்படுகின்ற விடயங்களை குறிப்பிடுகின்றது.

இந்த கூட்டிணைந்த முயற்சியானது, இலங்கையில் முக்கியமான சமூக அரசியல் விடயங்களை பிரதிபலிப்பதுடன் பஃவ்ரல் (PAFFREL), மாற்று கொள்கைகளுக்கான நிலையம் (CPA), சர்வோதய அமைப்பு, வெரிடே ரிசேர்ச் (Verité Research), தேசிய சமாதானப் பேரவை (NPC) ஆகிய நிறுவனங்களின் பங்காண்மையுடன் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தின் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றது.

ஊழல் காரணமாக நாடானது ஆளுகை சார்ந்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதுடன் உண்மையான நிலைபேறு தன்மைமிக்க, சமத்துவமிக்க பொருளாதார மீட்சியை அடைய வேண்டுமாயின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பகிரப்பட்ட புரிதலின்; அடிப்படையில் ‘பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூக கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டுள்ளது.


பல்வேறு துறைகள், புவியியல் பிரதேசங்கள், இன சமய கலாசார குழுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற 250 இற்கும் மேற்பட்ட பங்குபற்றுநர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதான ஆய்வாரள்களில் ஒருவரான பேராசிரியர் அர்ஜூன பராக்கிரம அவர்களினால் சிவில் சமூக கூட்டமைப்புக்காக இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இலங்கையின் ஆட்சியியல் பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கை வெளியீடானது செப்டெம்பர் 13 புதன்கிழமை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கொள்கை வகுப்பாளர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், தூதுவராலய பிரதிநிதிகள், சர்வதேச நிதியிடல் நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள், கல்வியியலாளர்கள் மற்றும் ஏனைய பல்துறைசார் அதிதிகள் பங்குபற்றினர். இவ்வறிக்கையின் துரித அவசியம் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புகளுக்கு எந்தவகையிலும் பொறுப்புகூறுவதில்லை. என்பதோடு தற்சமயம் அதிகரித்து வருகின்ற பொருளாதார அநீதிகள் மேலும் எரிச்சலூட்டுகின்றன. இந்த நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான உறுதிமிக்க முறையில் எத்தகைய பொதுக் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை.’


மேலும் ‘முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்ற ஊழலே இலங்கை அரசியலின் தன்மையை தீர்மானிக்கின்றது. நாட்டில் ஊழலானது பாரிய அளவில் தற்சமயம் பரவிக் காணப்படுவதுடன் பொது நிறுவனங்கள் தமது வகிபாகங்களை நிறைவேற்றுவதற்கு தடையான வகையில் ஊழலானது நாட்டை ஆட்கொண்டுள்ளது.’


இலங்கை கையாளுகின்ற நுட்பமுறைகளில், நாட்டின் பொறுப்புக் கூறல் வரைவுச் சட்டகத்தில் காணப்படுகின்ற கட்டமைப்பு சார்ந்த பலவீனங்கள், அரச அதிகாரிகளின் செல்வாக்கு மற்றும் தலையீடுகள், அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள், அரசாங்க கொள்முதல் செயன்முறைகளில் இடம்பெறும் மோசடிகள், சிவில் சமூக அமைப்புகளை அடக்குதல், சட்ட விரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுதல் என்பன இடம்பெற அதிக சாத்தியக்கூறு நிலவுவதாகவும் அவை அதிக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் இவ் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.


விதப்புரைகள்


இலங்கையின் ஆட்சியியல் பற்றிய சிவில் சமூக பகுப்பாய்வு அறிக்கையானது ஆட்சியியல் தொடர்பான 34 முக்கிய விதப்புரைகளை முன்வைக்கின்றது. இந்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 03 காலவரையறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன: உடனடி (0-6 மாதங்கள்), குறுகிய காலம் (12 மாதங்கள் வரை), மத்திய காலம் (24 மாதங்கள் வரை). வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் ஆகியவற்றை மேம்படுத்தல், அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேற்றுத் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துதல், நாட்டினுள் கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை மேம்படுத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த விதப்புரைகள் தொடர்பான பூரணத்துவமிக்க பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.


உடனடியானது (0 – 6 மாதங்கள்): தற்போதைய முறைமைகளின்; வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள்

 1. வரி விலக்குடன் தொடர்புடைய சகல தகவல்களையும் வெளிப்படுத்துகின்ற நிதி சார் வெளிப்படை தன்மை கொண்ட தளம் ஒன்றை பேணுதல்.
 2. அங்கீகரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பான கடந்த வருடத்திற்கான செலவு வேறுபாடுகளையும் அது தொடர்பான விளக்கங்களையும் உள்ளடக்கிய வருடாந்த அறிக்கையை ஒவ்வொரு வருடமும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடல்.
 3. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1மூஇ வருடாந்த வருமான இழப்பு ஏற்பட்டிருப்பின் வருமான மாற்றங்களில் ஏற்பட்ட விபரங்களை உள்ளடக்கி வருமான அறிக்கையொன்றினை காலாண்டுக்கு ஒரு முறை வெளியிடல்.
 4. கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகளை தேர்வு செய்யப்பட்ட கருத்துக்களை ஒழுங்கமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பின்னூட்டல் நடவடிக்கைளை வெளியிடல்.
 5. நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின்; (FMRA) சகல ஏற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துவதோடு பொருத்தமான முறையில் மீளாய்வு செய்து அவை மீறப்படும் பட்சத்தில் தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதி செய்தல்.
 6. தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் (தற்றுணிவு செலவினம்) மொத்த செலவில் அபிவிருத்தி செயற்பாடுகளின் கீழ் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை 3% க்கு மட்டுப்படுத்துதல்.
 7. வெளிப்படையான மற்றும் பொறுப்புக் கூறல் முறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசியல் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளினால் ஏற்படக்கூடிய ஊழல் மற்றும் வீண் விரயம் ஆகியவற்றை குறைத்தல்.
 8. அரச சேவைகள் அரசியல் மயப்படுவது தொடர்பானவை: பகிரங்க பொது கலந்துரையாடல் மூலம் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் ஆகியோருக்கான வெளிப்படைத் தன்மைமிக்க தெரிவுகள், மதிப்பீடுகள், பதவி உயர்வு நெறிமுறைகள் ஆகியவற்றை தாபிப்பதுடன் இத்தகைய நெறிமுறைகளை 06 மாத காலப் பகுதியினுள் சீராக நடைமுறைப்படுத்தல்.
 9. ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) சகல விதமான இரண்டாம் நிலை சந்தை கொடுக்கல் வாங்கல் தொடர்பான தரவுகளை அவற்றின் விற்பனை மற்றும் கொள்வனவு தொடர்பான சந்தை விலைகளை மதிப்பிடுவதற்கு போதிய தகவல்களை உள்ளடக்கி வெளியிடல் (2019 இல் வெளியிடப்பட்ட ஊழியர் சேமலாப நிதி கணக்காய்வாளர்களினால் பகுப்பாய்வு செய்யப்பட்டதன் பிரகாரம்)
 10. தகவல் அறியும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் கருத்திட்டங்கள் ஆரம்பிப்பதற்கு 03 மாதங்களுக்கு முன்னர் அவற்றுடன் தொடர்புடைய தகவல்களை உரிய முறையில் வெளியிடல்.
 11. பொதுக் கடன் தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை முழுமையாக உள்ளடக்கிய காலாண்டு இதழ் ஒன்றை வெளியிடல்.
 12. மொத்தமாக 100 மில்லியனுக்கு அதிகமான பொதுக் கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பான விநியோகஸ்தர்கள் பற்றிய தகவல்களை வெளியிடக்கூடிய இணையத் தளம் ஒன்றை பேணுதல்.
 13. சொத்து பிரகடனங்கள் தொடர்பில் பொதுமக்கள் அணுகி பெற்றுக் கொள்ளக்கூடிய விதத்தல் ஊழலுக்கு எதிரான சட்டம் தொடர்பான சட்ட வரைவுச் சட்டகம் பக்கச்சார்பின்றி நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
 14. அரசியலமைப்பு ரீதியாக கட்டாயப்படுத்தப்பட்ட காலவரையறையினுள் தேசிய தேர்தல்களை நடாத்துதல்.
 15. மின்னியல் முறையொன்றை தாபிப்பதன் மூலம் தேர்தல் பிரச்சார செலவு கண்காணிப்பு குற்றங்கள் தொடர்பான சட்டமுறை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
 16. இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவானது விசாரணை நடவடிக்கைகள் உட்பட சட்டத்தை வினைத்திறன்மிக்க முறையில் சமத்துவமாக பிரயோகிக்க தயாராக இருப்பதை உறுதி செய்தல்.
 17. சகல விதமான பாரிய அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான சுற்றாடல் தாக்க மதிப்பீடுகள் பற்றிய ஆவணங்களின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஒன்லைன் மூலம் அவற்றை வெளியிடுவதை உறுதி செய்தல்.
 18. ஜனநாயக ரீதியான மாற்றுக் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகள் உள்ளடங்களாக ஆளுகையுடன் தொடர்புடைய சகல விதமான பொருத்தமான அம்சங்கள் தொடர்பில் பொதுமக்களது பங்குபற்றுதலுக்கான வாய்ப்புகளை பேணி பாதுகாத்தல்.
  குறுகிய காலம் (12 மாதங்கள் வரை) : அரசியல் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேறு தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடைமுறைகள்
 19. அங்கீகரிக்கப்பட்ட எவ்வித திட்டங்களுமின்றி வரிவிதிப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தற்றுணிபை அதிகப்படியாக பயன்படுத்திக் கொள்வதற்கு காணப்படும் வாய்;ப்பினை அகற்றும் பொருட்டு அனைத்து வரி தொடர்பான சட்டங்களையும் திருத்துதல்
 20. இலங்கை கையொப்பமிட்டுள்ள புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க (உறுப்புரை 06) சமவாயத்தில்; எதிர்பார்க்கப்பட்ட விலை மற்றும் வரி தொடர்பான நடைமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தல்.
 21. வரி விலக்களித்தலில் வருடாந்த குறைப்பான 10மூ இனை 05 வருட சராசரி காலத்தினுள் அடைதல்.
 22. மத்திய வங்கிக்கு புறம்பாக பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகமொன்றினை தாபித்தல்.
 23. பொதுக் கொள்முதல் மீதான சிறந்த மேற்பார்வையை மேற்கொள்ளக் கூடிய வகையில் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை வலுப்படுத்துதல் மற்றும் 2019 ஆம் ஆண்டின் கொள்முதல் வழிகாட்டுதல் விதிமுறையை பொது மக்கள் ஆலோசனையுடன் நிறைவேற்றுதல்.
 24. 10 பில்லியன் ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்கின்ற மற்றும் போட்டித் தன்மைமிக்க விலை கோரல் தொடர்பான ஆகக் குறைந்த விகிதத்தை கொண்ட 10 இராஜாங்க அமைச்சுகள் ஃ நிறுவனங்கள் தொடர்பான விசேட கணக்காய்வுகளை மேற்கொள்ளல்.
 25. பொதுமக்கள் அணுகக் கூடிய விதத்தில் ஒன்லைன் மூலமாக நல முரண் பதிவேடொன்றை தாபித்தல் அல்லது நிறுவுதல்.
 26. அரச தொழில்முயற்சிகள் அல்லது நிறுவனங்கள் வெளிப்படையான மற்றும் பொறுப்புக் கூறலுடன் கூடிய முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் வகையிலான சட்ட விதிமுறைகளை இயற்றுதல் அல்லது உருவாக்குதல்.
 27. ஒவ்வொரு முறையும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுகின்ற பொழுது பொதுக் கணக்குகள் பற்றிய குழு, அரச தொழில்முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் தடைப்படாத விதத்தில் அவற்றின் தொடர் செயற்பாடும் பொறுப்புக் கூறலும் சிறப்பாக மேற்கொள்ளக்கூடிய விதத்தில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை திருத்துதல்.
 28. இராணுவத்தினரில் புதிய திறன்களை வளர்த்தல் மற்றும் தனியார் மற்றும் பொதுவான அரச காணிகளை மீண்டும் கையளித்தல்;; உள்ளடங்கலாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ குறைப்பு மூலமாக தேவையற்ற இராணுவ செலவினத்தை குறைத்தல்.
 29. புதிய சமூக பாதுகாப்பு வலையமைப்பு பண மாற்ற முறைமையின் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை அதிகரித்தல்.
 30. சட்டவிரோதமான பணப் பரிமாற்றங்கள் (IFFs) தொடர்புடைய முறையான மேற்பார்வை மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை உறுதி செய்தல்.
  மத்திய காலம் (24 மாதங்கள் வரை) : ஊழல் சார்ந்த இடர்வரு நிலை மற்றும் அபாயம் மற்றும் தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை ஆகியவற்றை கணிசமாகக் குறைக்க தேவையான கட்டமைப்பு மாற்றங்களை நோக்கிய நடவடிக்கைகள்
 31. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைக்கு அமைவாக (UNCAC) பரந்த கலந்தாலோசனையுடன் சொத்து மீட்பு சட்டத்தை இயற்றுதல் மற்றும்; StAR (திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான முன்னெடுப்பு) தொழில்நுட்ப உதவியுடன் ஏற்கனவே தொடங்கப்பட்ட ஊழல் வழக்குகள் உட்பட முக்கிய ஊழல் வழக்குகளில் முன்னேற்றத்தை உறுதி செய்தல்
 32. பிற நாடுகளில் நிறுவப்பட்ட ஆலோசனை அலுவலகங்களின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் ஒரு விசேட சுயாதீன ஊழல் வழக்கு விசாரணை அலுவலகத்தை நிறுவுதல்.
 33. மலையக தமிழ் பிரதேசங்களில் பயனாளிகளுக்கு சொந்தமான வீடமைப்புக்காக காணிகளை பராதீனப்படுத்துதல் மற்றும் பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களுக்கு (வீடமைப்பு மற்றும் வாழ்வாதார உரிமை) குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியத்தை வழங்குதல்.
 34. தீர்மானம் மேற்கொள்வதில் அர்த்தமுள்ள சுயாதீனத்தன்மையை உறுதி செய்வதற்காக அரசியல் சாராத பிரதிநிதிகளின் விகிதம் அதிகமாக இருக்கும் வகையில் அரசியலமைப்பு பேரவையின் உள்ளடக்கம் மற்றும் கட்டமைப்பை மாற்றுதல்.

அறிக்கையின் 34 விதப்புரைகள் தொடர்பான விரிவான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக தயவு செய்து முழு அறிக்கையையும் றறற.வளைசடையமெய.ழசப இல் பார்க்கவும்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அபிவிருத்தி பங்காளர்களின் உதவியுடன் மேற்கூறிய பிரதான விதப்புரைகளை நன்னோக்கத்தின் அடிப்படையில் முன்னுரிமைப்படுத்தும் படி இச் சிவில் சமூக கூட்டமைப்பானது அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

Share:

Related Articles