இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 16 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 06 புத்தல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கையை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு மொனராகலை – புத்தல பிரதேசத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன், அதன் ரிக்டர் அளவுகோலில் 2 அலகுகளாகவும் 4 தசமங்களாகவும் பதிவாகியுள்ளது.