NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானிய கைதிகள் விடுவிப்பு..!

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக விமானம் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, கடந்த மூன்று மாதங்களாக இலங்கை அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

குறித்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் உயர்ஸ்தானிகருக்கும் மொஹ்சின் நக்வி நன்றி தெரிவித்தார்.

Share:

Related Articles