NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பு!

இலங்கையில் தற்போது சுவாசம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், நகரமயமாக்கல், வளி மாசுபாடு, காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் சுவாச ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை தொடர்ந்து, இலங்கையில் சுவாச நோய்களின் ஆபத்தை குறைக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles