NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் மசாலா தொடர்பான முதலாவது இணையத்தளம் அறிமுகம்!

சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கல் உலக மசாலா சந்தையை அணுகும் நோக்கத்துடன் மசாலா மற்றும் தொடர்புடைய சந்தைப்படுத்தல் சபை இலங்கையில் மசாலா தொடர்பான முதலாவது இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இணையதளத்தில் உள்ளூர் மசாலாப் பொருட்கள் மற்றும் மசாலா மற்றும் தொடர்புடைய சந்தைப்படுத்தல் சபையால் இயக்கப்படும் இருபத்தி நான்கு விற்பனை நிலையங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. இதன் மூலம் இலங்கையின் எந்த இடத்துக்கும் மசாலாப் பொருட்களை அனுப்ப முடியும். தபால் துறை மூலம் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட உள்ளது.
சீனா போன்ற நாடுகளில் அதிக மசாலா சந்தை இருப்பதால், இந்த நாட்டின் தரமான தயாரிப்புகளை அத்தகைய சந்தைகளுக்கு வழங்க முடியும், மேலும் இந்த வலைத்தளத்தின் மூலம் ஏற்றுமதியாளர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
Share:

Related Articles