NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் மீண்டும் நிலஅதிர்வு…!

மொனராகலை -புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலஅதிர்வு நேற்று (25) இரவு 11.20 மணியளவில் 2.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் சுமார் ஒரு கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வு இந் நாட்டில் இயங்கி வரும் நான்கு நில அதிர்வு அளவீடுகளும் பதிவாகியுள்ளது.

எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles