இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெற்றிலையோடு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிற சுண்ணாம்பில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையிலிருந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 48 வெற்றிலை பொதி மாதிரிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இளஞ்சிவப்பு நிற சுண்ணாம்பில் புற்று நோயை உண்டாக்கும் இரசாயனம் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
ரோடமைன் பி என்பது ஆடை மற்றும் காகித அச்சிடும் தொழில்களில் நிறமியாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இது களைக்கொல்லிகளை நிறமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் செயற்கை சாய இரசாயனமாகும்.