NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை – ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (09) கண்டி – பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

பகல் – இரவு ஆட்டமாக இடம்பெறும் இன்றைய போட்டி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் 11 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் 7 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

எஞ்சிய நான்கு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே, டெஸ்ட் போட்டியைப் போன்று ஒருநாள் தொடரையும் வெல்வதே அணியின் நோக்கம் என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles