இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில்இ அந்த நாட்டின் தேவைகளை இந்தியா மிகவும் உணர்ந்து செயற்பட்டதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி நிறுவனமான பி.டி.ஐக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மதிப்புமிக்க அண்டை நாடான இலங்கையின் கடினமான காலங்களில் அவர்களின் தேவைகளையும் நிறைவேற்றினோம்.
இதற்கிடையில் கடன் நெருக்கடி உலகிற்கு, அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு மிகுந்த கவலையளிக்கும் விடயமாக உள்ளது.
எனவே கடனில் சிக்கியுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு உதவ உறுதியான கட்டமைப்பை உருவாக்க, வரவிருக்கும்G 20 மாநாட்டில் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா எதிர்ப்பார்க்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.