NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கடற்படையை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்த சம்பவத்தை கண்டித்தும் இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளது.

ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதாகவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும் நேற்று 32 மீனவர்களை சிறைபிடித்த சம்பவத்தை கண்டித்தும் இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 700க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாது படகுகளை கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் 7ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநிலம் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles