NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை குரங்குகளை பெற்றுக் கொள்வதற்கான காரணத்தை வெளியிட்ட சீன நிறுவனம்!

சீனாவில் உள்ள தனது நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் மிருகக்காட்சிசாலையில் கண்காட்சிக்காக மட்டுமே குரங்குகளை இலங்கையில் பெற்றுக்கொள்ள விரும்பியதாக, சீனாவின் ‘Shijian Wuyu Animal Breeding’ என்ற தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்மே அந்நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

தனது நிறுவனம் சீனாவில் பல உயிரியல் பூங்காக்களை நடத்தி வரும் புகழ்பெற்ற நிறுவனம் என அந்நிறுவனம் விவசாய அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள பெரும் குரங்கள் தொகையில் குறிப்பிட்ட தொகையை வழங்கினால் அவற்றை தமது மிருகக்காட்சிசாலையில் காட்சிப்படுத்த முடியும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இதற்கு அங்கீகாரம் வழங்கினால், குரங்குகளை சீனாவுக்கு மாற்றுவதற்கு சீன அரசாங்கத்தின் அனுமதியைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கவுள்ளதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தனது நிறுவனம் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இருந்து வன விலங்குகளை பெற்று, உயிரியல் பூங்காக்களில் காட்சிப்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:

Related Articles