(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (26) இடம்பெறவுள்ளது.
நேற்று நடைபெறவிருந்த இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது.
அதனை தொடந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய முதலாவது இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 48.4 ஓவர்களில் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில், தனஞ்சய டி சில்வா 57 ஓட்டங்களையும்
தினேஷ் சண்டிமால் 34 ஓட்டங்களையும் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில், நசீம் ஷா மூன்று விக்கெட்டுகளையும் அப்ரார் அகமது நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதற்கமைய தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அப்துல்லா ஷாபிக் 87 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் பாபர் அஸாம் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்ஸில், 12 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.