NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை…!

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய கடனுதவித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அண்மையில் 500 பேருந்துகள் வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன், கடந்த காலங்களில் உதிரிப்பாகங்கள் பற்றாக்குறை காரணமாக சேவையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கணிசமான பேருந்துகள் தற்போது பழுதுபார்க்கப்பட்டு, சேவையில் ஈடுபடுத்தத் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குப் போதுமான ஆளணி வளம் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வெற்றிடங்கள் காரணமாக பேருந்து சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துச் சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அதனை நிவர்த்தி செய்யும் வகையில் போக்குவரத்துச் சபைக்கு புதிதாக 520 சாரதிகள் மற்றும் 170 நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles